Home நாடு வருட இறுதிக்குள் ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்!

வருட இறுதிக்குள் ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்!

781
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைத்து, குழந்தைகளுக்கு கற்பிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தாமல், மாணவர்களிடத்தில் மனித பண்புகளை உருவாக்க முயற்சி செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

நாடு தழுவிய நிலையில் இம்முறை சில பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு ஆசிரியர்களின் பங்கு பெரிதளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் எல்லா பள்ளிகளிலும் இம்முறை செயல்படுத்தப்பட்டு, அதன் உன்னத நோக்கத்தினை அனைத்து ஆசிரியர்களும் , மாணவர்களும் புரிந்து செயல்படுவர் என நம்புவதாக அவர் கூறினார்.