கிரிஸ்ட்சர்ச்: கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாத சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கான அமைதி ஒன்றுக்கூடலில், நியூசிலாந்து பிரதமர் ஜாசிண்டா அடெர்ன் கலந்து கொண்டதாகக் சின் ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த அமைதி ஒன்றுக்கூடலில் நியூசிலாந்தின் அனைத்து மக்களும், இனம், மதம் பாராமல் கலந்து கொண்டனர்.
“நியூசிலாந்து உங்களுக்காக துக்கமடைகிறது, நாம் அனைவரும் ஒன்றே” என அடெர்ன் கூறினார்.
கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஒரு வாரம் கழித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் நியூசிலாந்தியர்கள், உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிடங்களில் அமைதி மரியாதை செலுத்தினர்.
அந்த கொடூரத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மூவர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.