Home நாடு மைக்கேல் அனாக் காரிங் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்!

மைக்கேல் அனாக் காரிங் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்!

898
0
SHARE
Ad

சிங்கப்பூர்: மலேசியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அனாக் காரிங், இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என பெர்னாமா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கான மலேசிய தூதரகம் இந்த செய்தியை உறுதிபடுத்தியதாக அது தெரிவித்தது.

கடந்த 2015-இல், கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு மைக்கலுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, பிரதமர் மகாதீர் முகமட், மைக்கலை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் முயற்சிகள் செய்து வருவதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் துறை அமைச்சர் லியூ வூய் கியோங் சிங்கப்பூருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, மற்றொரு மலேசியரான பிரபு பத்மநாதன், சிங்கப்பூரில் தூக்கிலடப்பட்டது குறிப்பிடத்தக்கது.