Home நாடு ஜாகிர் போன்றவர்கள் நாட்டிற்கு உந்துதலாக அமைகிறார்கள் என்ற கருத்திற்கு, மக்கள் ஆவேசம்!

ஜாகிர் போன்றவர்கள் நாட்டிற்கு உந்துதலாக அமைகிறார்கள் என்ற கருத்திற்கு, மக்கள் ஆவேசம்!

1411
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகிர் நாயக்கை, இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா நேற்று சந்தித்ததாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து, முஸ்லிம் அல்லாத மக்களின் எதிர்ப்பலைகள் இணையச்செய்தி ஊடகங்களிலும், அவரது முகநூல் பக்கத்திலும் எழுந்தன.

கடந்த வாரத்தில் ஜாகிர் நாயக்கின் கைது எப்போது எனக் கேட்ட மக்களின் குரலுக்கு செவிமடுக்காத அரசாங்கத்தின் நிலைப்பாடாக இது அமைகிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து லோயர்ஸ் பர் லிபர்டியின் (Lawyers for Liberty) நிருவாகத் தலைவரான லத்தீபா கோயா, முஜாஹிட்டின் இந்தச் செயலை சாடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

உங்களது அமைச்சர் சேவையைத் தொடருங்கள். நீங்கள் விரைவில் பாஸ் கட்சியில் இணைந்துக் கொள்ளலாம்”என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜாகீர் நாயக், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்பதால் அவரை திருப்பி அனுப்ப, பலமுறை இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. ஆயினும், முறையான, ஆவணங்கள் இல்லாமல் அவ்வாறு செய்ய இயலாது என மலேசியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் பரப்புரைகளை மேற்கொண்ட ஜாகிர் அனுபவம் மிக்கவர் எனவும், அவரது அனுபவங்கள் தமக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அமைச்சர் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரது இந்த பணியால் இஸ்லாமிய மதத்தின் பெருமையை அனைவரும் அறிந்துக் கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய மக்களின் ஒற்றுமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவரை, புகழ்ந்து பேசுவது சரியானதாக இல்லை என லத்தீபா சாடியிருந்தார். மலேசியாவிற்கு ஓர் உந்துதல் சக்தியாக ஜாகிரை எண்ணுவது, எப்படி சாத்தியப்படும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.