நியூயார்க்,டிசம்பர் 22- சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய பெண் தூதர் தேவயானியை ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நியூயார்க் துணை தூதர் தேவயானியை அடுத்து கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்திர பிரதிநிதிகள் குழுவிற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தியாவின் இந்த உத்தரவு தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய பெண் தூதர் தேவயானியை ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்விக்கு ஐ.நா பதில் அளிக்க மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிடும் எண்ணம் ஐ.நா.விற்கு இல்லை என்று கூறியுள்ளது. இதனையடுத்து, தேவயானி பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் வழக்கிலிருந்து தப்ப முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.