Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் புகார்களை ம.இ.கா மத்திய செயற்குழு விசாரிக்கும் – தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் அறிவிப்பு

தேர்தல் புகார்களை ம.இ.கா மத்திய செயற்குழு விசாரிக்கும் – தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் அறிவிப்பு

862
0
SHARE
Ad

Prakash-Rao-300-X-200கோலாலம்பூர், டிசம்பர் 26 – கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற ம.இ.காவின் தேர்தல்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விரைவில் நடைபெறவிருக்கும் ம.இ.கா மத்திய செயற்குழு விசாரிக்கும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் (படம்) அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியான பத்திரிக்கைத் தகவல்களின்படி, நடந்து முடிந்த ம.இ.கா தேர்தல்கள் குறித்து இதுவரை 5 புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கட்சி அரசியலில் இது சாதாரண நடைமுறைதான் என்றும் குறிப்பிட்ட பிரகாஷ் ராவ் இது குறித்த தேவையில்லாத பத்திரிக்கை அறிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சில வேட்பாளர்கள் புகார்கள் சமர்ப்பித்துள்ள வேளையில், மத்திய செயலவையின் முடிவைப் பொறுத்து புகார் செய்தவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவரும்.

மத்திய செயலவையின் முடிவு திருப்தியளிக்கவில்லையென்றால் புகார்தாரர்கள் சங்கங்களின் பதிவதிகாரிக்கு மேல் முறையீட்டை சமர்ப்பிக்கலாம். சங்கங்களின் பதிவதிகாரியின் முடிவே இறுதியானதாகும்.

இதுவரை, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சி ஒன்றின் தேர்தல் செல்லாது என்றோ, மறு தேர்தல் நடத்த வேண்டுமென்றோ சங்கங்களின் பதிவதிகாரி முடிவு செய்ததில்லை. ஆனால், எதிர்க் கட்சியான ஜனநாயக செயல்கட்சியின் தேர்தல்கள் குறித்து புகார்கள் எழுந்தபோது, அந்த கட்சியின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ம.இ.காவின் மத்திய செயலவை என்ன இறுதி முடிவு எடுக்கப் போகின்றது, இதன் தொடர்பில் சங்கப் பதிவதிகாரி என்ன முடிவெடுக்கப் போகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள ம.இ.கா வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.