சென்னை, டிசம்பர் 27- நடிகை சமீரா ரெட்டி தனது 2 வருட காதலரை மணக்க உள்ளார். அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி . இவருக்கு மோட்டார் வண்டி நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் நட்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்களது நட்பு காதலாக மாறியது. தற்போது அவரது காதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த வாரம் சமீரா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதுகுறித்து சமீரா கூறுகையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.