Home கலை உலகம் சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

654
0
SHARE
Ad

INDIA-ENTERTAINMENT-BOLLYWOODசென்னை, மே 27 – தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் கௌதம் மேனனால் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி.

இவர் நடித்த முதல் படமான ‘வாரணம் ஆயிரம்’ பெரிய வெற்றி பெற்றது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘நடுநிசி நாய்கள்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’ ஆகிய படங்கள் வியாபார ரீதியாகத் தோல்வி அடையவே, இவரைத் தேடி வாய்ப்புகள் வரவில்லை.

#TamilSchoolmychoice

இதனால், சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கடந்த வருடம் அக்ஷய் என்பவரைத்  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமீராரெட்டி-அக்ஷய் தம்பதியருக்குத்  தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

shamiraகடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக்  குழந்தையை மருத்துவமனையில் பெற்றெடுத்தார் சமீரா ரெட்டி. தற்போது, குழந்தையும், சமீராவும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சமீரா ரெட்டி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.