Home கலை உலகம் சமீரா ரெட்டி மும்பை தொழில் அதிபரை மணந்தார்!

சமீரா ரெட்டி மும்பை தொழில் அதிபரை மணந்தார்!

553
0
SHARE
Ad

Indian Bollywood actress Sameera Reddy (L) poses with businessman Akshai Varde during their wedding at her residence in Mumbai on January 21, 2014. AFP PHOTO/STR

சென்னை, ஜன 22- தமிழில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமீரா ரெட்டி, நேற்று மாலை மும்பை தொழில் அதிபரான அக்ஷய் வர்தே என்பவரை கரம் பிடித்தார்.

நடிகை சமீரா ரெட்டி-தொழில் அதிபர் அக்ஷய் வர்தே திருமணம் மும்பை பாந்திராவில் உள்ள சமீரா ரெட்டி பங்களாவில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தவிர கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையாவும் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

சமீரா ரெட்டி திருமண தகவல் வெளியானதை தொடர்ந்து அவரது பங்களா முன்பு ஏராளமான பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் குவிந்தனர். அவர்கள் யாரும் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

திருமணம் முடிந்து இரவு 8 மணிக்கு மேல் சமீரா ரெட்டி தனது கணவர் அக்ஷய் வர்தேயுடன் வெளியே வந்தார். அதன்பின்னரே பத்திரிக்கையாளர்கள் இந்த புதுமணத் தம்பதியினரை படம் பிடித்தனர்.