Home கலை உலகம் ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்ட சமீரா ரெட்டி!

ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்ட சமீரா ரெட்டி!

788
0
SHARE
Ad

namal-rajapaksaசென்னை, ஆகஸ்ட் 23 – ராஜபக்சே மகனுடன் ஆட்டம் போட்டுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. இவர்கள் ஆட்டம் போட்ட படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது.  இதனால் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது என தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசினை, நடிகர் சங்கம் கண்டித்தது. இன்று வரை அவரால் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் வைக்கவே முடியாத நிலை உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே மகன் நமல் பக்சேவுடன் நடிகை சமீரா ரெட்டி கட்டிப் பிடித்தபடி மிக நெருக்கமாக இருக்கும் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சே மகனுடன் நெருக்கமாக இருக்கும் சமீரா ரெட்டியை கண்டித்து, இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகமே கண்டிக்கிறது.

இந்த நிலையில், அவரது மகன் நம்லுடன் சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. சமீரா ரெட்டியை தமிழ் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.namal-sameera

இன்னொரு முன்னணி நடிகையான கங்கனா ரணவத்தும் (தாம் தூம் பட நாயகி) இலங்கைக்குப் போய் ராஜபக்சே மாளிகையில் விருந்துண்டு, ஆட்டம் போட்டுவிட்டு வந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.