Home நாடு “கிங் ஆப் கிங்க்ஸ்” இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கேற்கவில்லை!

“கிங் ஆப் கிங்க்ஸ்” இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கேற்கவில்லை!

620
0
SHARE
Ad

AVN5_ILAYARAJA_21557f

கோலாலம்பூர், டிசம்பர் 28 –  உடல் நலம் காரணமாக இன்று நடைப்பெறும் “கிங் ஆப் கிங்க்ஸ்” இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கு கொள்ள இயலவில்லை. இருப்பினும், இந்த இசைநிகழ்ச்சி திட்டமிட்டபடி இன்று மாலை  மெர்டேக்கா அரங்கில்  நடக்கவிருக்கிறது.

இன்று, மாலை 3.30 மணியளவில் முகநூலில் “கிங் ஆப் கிங்க்ஸ்”  அதிகாரப்பூர்வ பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் தோன்றிய இசைஞானி இளையராஜா இந்நிகழ்ச்சியின் தம்மால் பங்கேற்க இயலவில்லை என்று வருத்தோடு தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தன்னை  மலேசியா இரசிகர்களிடம் காட்டுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் அதிக சிரத்தை எடுத்துள்ளனர். ஆனால், தீடீர் உடல் நலக்குறைவால் தம்மால் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள  இயலவில்லை.ஆயினும், மற்ற கலைஞர்களை கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடைப்பெறவுள்ளது. தாம் அங்கு இல்லாவிட்டாலும் என்றென்றும் உங்களுடனே இருப்பேன். எனவே, இந்நிகழ்ச்சியில் இரசிகர்கள் கலந்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, இந்நிகழ்ச்சிக்கு தாம் வராத காரணத்தினால் ரசிகர்கள் யாரும் இசைநிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கேட்டுகளின் பணத்தை  திரும்ப தரவேண்டுமென்று ஏற்பாட்டுக் குழுவினரிடம் கேட்க வேண்டாம் என்றும் அவர்  கேட்டுக் கொண்டார்.