Home இந்தியா டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார்!

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார்!

489
0
SHARE
Ad

Tamil-Daily-News_57184565068புதுடெல்லி, டிச 28 – ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றார்.

டெல்லியிலுள்ள  ராம்லீலா மைதானத்தில் இன்று நண்பகலில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் கெஜ்ரிவாலுடன் மணீஷ் சிசோடியா, ராகி பிர்லா, சோம்நாத் பாரதி, சவுரப் பரத்வாஜ், கிரிஷ் சோனி, சதேந்திர ஜெயின் ஆகிய 6 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

#TamilSchoolmychoice

துணை நிலை ஆளுநர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கெஜ்ரிவாலின் இந்த அமைச்சரவையில் ராகி பிர்லா (26 வயது) என்பவர் இளம் வயதில் அமைச்சராக பதவியேற்றவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் 35,000 பேர் கலந்து கொண்டனர்.