Home Featured இந்தியா அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

690
0
SHARE
Ad

Arvind-Kejriwal

புதுடில்லி –  நேற்று முன்தினம் முன்னாள் இராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து புதுடில்லியில் அந்த சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பாஜக ஆட்சிக்கு எதிரான அரசியலாக்கி வருகின்றார்கள்.

தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரரின் குடும்பத்தினரை நலம் விசாரிக்க லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

பின்னர் அருகிலுள்ள ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு 7.30 மணியளவில் (இந்திய நேரம்) கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

“இதில் அரசியல் ஏதுமில்லை. முதல்வர் என்ற முறையில் எனது மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு தற்கொலை சம்பவத்தில் குடும்பத்தினரைக் காணச் சென்றேன். அது என் கடமையும் கூட. ஆனால் பாஜக அரசாங்கம் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என அஞ்சுகின்றது” என தன் கைது குறித்து கெஜ்ரிவால் கூறியுள்ளார்.