Home One Line P2 அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 16 டில்லி முதல்வராக பதவியேற்கிறார்!

அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 16 டில்லி முதல்வராக பதவியேற்கிறார்!

728
0
SHARE
Ad

புது டில்லி: நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழா டில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று புதன்கிழமை காலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்த கெஜ்ரிவால் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பாஜக தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

ஆயினும், பாஜக பெற்ற 8 தொகுதிகளும், 2015-ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றே கூறப்படுகிறது.