Home தொழில் நுட்பம் சந்தையில் புதிது: விண்டோஸ் 8.1 உடன் கூடிய Acer Iconia W4!

சந்தையில் புதிது: விண்டோஸ் 8.1 உடன் கூடிய Acer Iconia W4!

639
0
SHARE
Ad

bytz_mk_p9a_3012_5colsகோலாலம்பூர், டிச 30 –  விண்டோஸ் 8.1 மென்பொருள் கொண்ட ஏசெர் ஐகோனியா ( Acer Iconia W4) என்ற புதிய வகை கையடக்கக் கணினி சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கையடக்கக் கணினி இதற்கு முந்தைய ஏசெர் வெளியீட்டைக் காட்டிலும் துல்லியமாகவும், பிரகாசமாகவும் படங்களைக் காட்டக்கூடிய ‘Zero Air Gap’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தொடுதிரைக்கும் (touchscreen), எல்சிடி மாடலுக்கு (LCD module) இடையேயான காற்றைக் குறைத்து, பிரதிபலிப்பதைக் கட்டுப்படுத்தி வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், இதில் 5 மெகா பிக்சல் அளவுடைய பின் கேமெராவும் (rear camera), 2 மெகா பிக்சல் அளவிற்கான முன் கேமெராவும் (front-facing camera) உள்ளன. அத்துடன் 64 GB கொண்ட தகவல் சேமிப்பு இடத்தையும் (storage space) கொண்டுள்ளது.

இந்த கையடக்கணினியில் Word மற்றும் Excel கோப்புகளை பயன்படுத்தும் வகையில் Office Home மற்றும் Student 2013 என்ற இரு முன்பதிவிறக்கம் செய்யப்பட்ட வசதிகள் உள்ளன.

இதன் தற்போதைய சந்தை விலை 1,099 ரிங்கிட் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கும் கிரஞ்ச் கவர் (Crunch Cover) மற்றும் கிரஞ்ச் கீ போர்டு (Crunch Keyboard) ஆகியவற்றின் விலை முறையே 99 மற்றும் 199 ரிங்கிட் ஆகும்.