Home கலை உலகம் தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் : ஆமிர்கான் திட்டவட்டம்

தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் : ஆமிர்கான் திட்டவட்டம்

506
0
SHARE
Ad

Aamir-Khan1புது டெல்லி, ஜன 3- மொழி தெரியாததால் தமிழ், தெலுங்கு என எந்த தென்னிந்திய படத்திலும் நடிக்க மாட்டேன் என்றார் ஆமிர்கான். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, “ மராட்டி மொழியை கற்பது உண்மைதான். மராட்டிய படத்திலும் நடிக்க விரும்புகிறேன். மும்பைவாசியாக இருப்பதால் இது எனக்கு எளிதாக இருக்கும். ஆனால் அதே சமயம், தமிழ், தெலுங்கு உள்பட எந்த தென்னிந்திய மொழியும் எனக்கு தெரியாது.

அதனால், அந்த மொழியில் நடிப்பது எனக்கு சிரமமாக இருக்கும். கலைக்கு மொழி தேவையில்லை என்பது உண்மைதான். அதே சமயம், வசனங்களை உச்சரிக்கும்போது உணர்வுபூர்வமாக அதை வெளிக்காட்டுவது அவசியம்.

இந்த வசனத்துக்கு இது அர்த்தம் என இயக்குனர் கூறி, உணர்வை வெளியே கொண்டுவந்தாலும் அது செயற்கையாக இருக்கும். நமக்கே அதன் அர்த்தம் புரிந்தால்தான் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியும்” என்று கூறினார்.