அந்த சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டார்கள். அனைவரும் இந்த சுவரொட்டியை பற்றி தான் பேசுகிறார்கள். அந்த ஒரு சுவரொட்டியால் அமிர் கானுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
ட்விட்டரில் அமிர் கானை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகை சன்னி லியோனுக்கு போட்டியாக அமிர் வந்துவிட்டார் என்று அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.
தயவு செய்து ஆடை அணிந்து வாருங்கள் அமிர் என்று எழுத்தாளர் ஷோபா டே தெரிவித்துள்ளார். இப்படி ஒரு சுவரொட்டிக்கு போஸ் கொடுத்து அமிர் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என எழுத்தாளர் ஷோபா டே தெரிவித்துள்ளார்.
ஆமிர் கானின் நிர்வாண சுவரொட்டியை கண்டித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆமிருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கண்டன போராட்டம் நடத்தியவர்கள் கோஷமிட்டதுடன் பி.கே. பட சுவரொட்டியையும் தீ வைத்து எரித்தனர். முன்னதாக இந்த சுவரொட்டி தொடர்பாக ஆமிர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.