Home உலகம் காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!

காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!

538
0
SHARE
Ad

gazaகாஸா, ஆகஸ்ட் 5 – பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 1800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் 67 இஸ்ரேலியர்களும் பலியாகி இருக்கின்றனர்.

gaza2இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேர யுத்தம் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

உள்ளூர்நேரப்படி அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரத்துக்கு இந்த யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

article-2இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டாலும் அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட போது, இஸ்ரேல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.

articleஎனினும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் ஒப்புக்கொள்ள தயார் என இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே போல் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான சமி அபு சுக்ரி, எகிப்து முன்வைத்த யோசனையை தாங்களும் ஏற்பதாக தெரிவித்தார். எகிப்து அதிகாரிகளும் இந்த 72 மணி நேர யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர்.