Home இந்தியா அறிவியல் உலகின் மற்றொரு மைல் கல்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-டி5

அறிவியல் உலகின் மற்றொரு மைல் கல்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-டி5

616
0
SHARE
Ad

gslv (1)

ஸ்ரீஹரிகோட்டோ, ஜன 6- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி  டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 17 நிமிடம் 8 விநாடியில் ராக்கெட்டிலிருந்து செயற்கை கோள் பிரிந்து வட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வெற்றி மூலம் இந்தியா மகத்தான சாதனை படைத்துள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து நேற்று மாலை 4.18 க்கு ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் தகவல் தொழில் நுட்பத்துக்கு உதவிடும் வகையிலான ஜி சாட்14 என்ற செயற்கை கோள் பொருத்தப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த செயற்கை கோளானது கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட எஜூசாட் என்ற செயற்கை கோளுக்கு மாற்றாக செலுத்தப்பட்டுள்ளது. எஜூசாட் டின் பணிக்காலம் சில மாதங்களில் முடிவதால் அதற்கு மாற்றாக தற்போது ஜிசாட்14 விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த செயற்கை கோளில் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்டெண்டு சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், 2 கே.ஏ பாண்ட் பீகான்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், ராக்கெட்டுக்கான முதல் நிலை, இரண்டாம் நிலை எரிபொருட்கள் நிரப்பும் பணியும் முடிவடைந்தது. தொடர்ந்து நேற்று காலை எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவு பெற்று, ராக்கெட் புறப்படுவதற்கான அனைத்து விதமான பணிகளும் நிறைவு பெற்று தீ பிழம்புகளை கக்கியபடி, பூமியை அதிரச்செய்யும் பலத்த ஓசையுடன் ஜி.எஸ்.எல்.வி  டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜி சாட் 14 செயற்கை கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகளாகும் என்பது குறிப்பிடதக்கது.

ஜிஎஸ்எல்வி கடந்து வந்த பாதை

*ஜி.எஸ்.எல்.வி டி 1 கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

*ஜி.எஸ்.எல்.வி  டி 2 2003ம் ஆண்டு மே 8ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

*ஜி.எஸ்.எல்.வி  எப்01 2004 செப்டம்பர் 20ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

*ஜி.எஸ்.எல்.வி  எப்02 2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி செலுத்தப்பட்டது. தோல்வியில் முடிந்தது.

*ஜி.எஸ்.எல்.வி  எப் 4 2007ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

*ஜி.எஸ்.எல்.வி டி3 கடந்த 2010 ஏப்ரல் 15ல் செலுத்தப்பட்டது. தோல்வியடைந்தது.

*ஜி.எஸ்.எல்.வி எப்06 கடந்த 2010 டிசம்பர் 25ம் தேதி செலுத்தப்பட்டது. தோல்வியடைந்தது.

*தற்போது ஜி.எஸ்.எல்.வி டி5 2014 ஜனவரி 5ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.