Home உலகம் வங்கதேச தேர்தல் பயங்கரம் : 200 வாக்குசாவடிகளில் குண்டுவெடிப்பு !

வங்கதேச தேர்தல் பயங்கரம் : 200 வாக்குசாவடிகளில் குண்டுவெடிப்பு !

644
0
SHARE
Ad

Bangladesh-election

தாகா, ஜன 6- வங்க தேசத்தில் நேற்று நடைபெற்ற பொது தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பெட்ரோல் குண்டுகளை வெடித்தும், வாக்கு சீட்டுகளுக்கு தீவைத்து கொளுத்தியும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில் 19 பேர் பலியாகினர், 200 சாவடிகள் எரிந்து நாசமாகின. வங்க தேசத்தில் நேற்று பொது தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆளும் அவோமி லீக் கட்சியின் ஆட்சியை எதிர்த்துவரும் எதிர்க்கட்சியினர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இதையடுத்து, நாடு முழுவதும் வாக்குசாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் வாக்கு சாவடிகளுக்கு வந்த ஆயிரக்கணக்கான போராட்டகாரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 200க்கும் மேற்பட்ட சாவடிகள் எரிந்து நாசமாகியுள்ளன. வாக்குசீட்டு கட்டுகளை பறித்து தீயிட்டு கொளுத்தினர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களை தாக்கியதில் 19 பேர் பலியாகினர். இத்தாக்குதல் நாடு முழுவதும் நடத்தப்பட்டதால், எதிர்கட்சியை சேர்ந்தவர்களின் திட்டமிட்ட தாக்குதல் என்று தெரிகிறது. இந்த பயங்கர கலவரத்தால் வாக்குப்பதிவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 26 சதவீத வாக்குகள் பதிவானது.

ஆனால் இம்முறை அதைவிட குறைவான வாக்குகளே பதிவாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி சையத் அபு சலீம் கூறியதாவது, “நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் வாக்குசாவடிகளில் தாக்குதல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் தீப்பந்தம் கொண்டு வாக்கு சாவடிகளையும், வாக்குசீட்டுகளையும் கைப்பற்றி கொளுத்தினர்.

 

இதனால் 200க்கும் மேற்பட்ட சாவடிகள் எரிந்து நாசமாகின. போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களில் 19 பேர் பலியாகினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை உருவானது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். நாடு முழுவதும் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் தாகாவிலும் இரு சாவடிகளில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதனால் வாக்குபதிவு பாதிக்கப்பட்டுள்ளது” என்று  அவர் கூறினார்.