Home வணிகம்/தொழில் நுட்பம் துபாய் வர்த்தக திருவிழாவில் இந்தியருக்கு குலுக்குச்சீட்டு பரிசுமுறையில் சொகுசு கார்களும் 17 லட்சம் வெள்ளி...

துபாய் வர்த்தக திருவிழாவில் இந்தியருக்கு குலுக்குச்சீட்டு பரிசுமுறையில் சொகுசு கார்களும் 17 லட்சம் வெள்ளி பரிசும்

509
0
SHARE
Ad

dubai luckydraw

துபாய், ஜன 6- உலகின் செல்வ வளமை மிகுந்த நாடுகளில் ஒன்றான துபாயில் ‘இன்ஃபினிட்டி ஷாப்பிங் ஃபெஸ்ட்டிவல்-2014’ என்ற பெயரில் வர்த்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

இங்கு வரும் பார்வையாளர்கள் நாள்தோறும் இந்த வர்த்தக திருவிழாவில் விற்கப்படும் குலுக்குச்சீட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

10 ஆண்டுகளாக துபாயில் தையற்காரராக வேலை செய்துவரும் இந்தியரான ஃபசலுதீன் குட்டிபாலக்கல்(33) என்பவருக்கு இரண்டாம் நாள் நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசு கிடைத்துள்ளது. ‘இன்ஃபினிட்டி’ நிறுவனத்தின் 2 அதிநவீன சொகுசு கார்களுடன் 1 லட்சம் திர்ஹம் ரொக்கமும் இவருக்கு பரிசாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.