Home உலகம் இந்தோனிசியாவில் வெடித்து சிதறும் எரிமலை

இந்தோனிசியாவில் வெடித்து சிதறும் எரிமலை

550
0
SHARE
Ad

volcano2.large

கோலாலம்பூர், ஜன 6- இந்தோனிசியாவில் எரிமலையொன்று வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தோனிசியாவில் வடக்கு சுமாத்ரா தீவில் ‘சீனாபங்ஸ்’ என்ற எரிமலை உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியது. சுமார் 50 தடவை வெடித்த அந்த எரிமலையில் இருந்து சாம்பல் மற்றும் நெருப்பு குழம்பு வெளியானது.

#TamilSchoolmychoice

இன்று மீண்டும் இந்த எரிமலை வெடித்து சிதறி வருவதால் அப்பகுதி முழுவதும் காற்றில் சாம்பல் பரவுகிறது. வானில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்துக்கு இந்த சாம்பல் பறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ‘சீனாபங்ஸ்’ எரிமலை அருகேயுள்ள ஜிவாரா, பிந்து பெசி மற்றும் அதை சுற்றி 7 கிலோ மீட்டர் பரப்பளவில் வாழும் கிராம மக்கள் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.