Home உலகம் பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு!

பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு!

701
0
SHARE
Ad

Kilaueaவாஷிங்டன், செப்டம்பர் 9 – பசிபிக் பெருங்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், ஆராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் கார்ட்னர் தலைமையில் எரிமலைகள் வளம் குறித்தும் பசிபிக் பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கடலுக்கு அடியில் மிகப் பெரும் எரிமலை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த எரிமலையானது 1,100 மீட்டரில் இருந்து 5,100 மீட்டர் ஆழம் வரை உயரமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த எரிமலையானது பசிபிக் பெருங்கடலின் ஜார்வில் தீவின் தென்பகுதியில் 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

#TamilSchoolmychoice

எனினும் இந்தப் பகுதி, மக்கள் பயன்பாட்டில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலையின் வடிவம் மற்றும் அளவினை வைத்து கணக்கிடுகையில் இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

‘மல்டிபீம் எக்கோ சௌண்டர்ஸ்’ (Multibeam Echo Sounders) என்ற தொழில் நுட்பத்தின் உதவியால் நிபுணர்கள் அந்த எரிமலையைப் படம் பிடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவலாகும்.