ஜகார்த்தா: அனாக் கிராகத்தாவ் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என இந்தோனிசிய தரப்பு தெரிவித்தது. அப்பகுதியிலிருந்து 5 கி.மீ வரையிலும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தோனிசிய கடற்கரைப் பகுதியைத் ஆழிப் பேரலைத் தாக்கிய ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் கனமான தூசி காரணமாக, விமானங்கள் திசை திருப்பப்படுவதாக ஏர்னேவ் (AirNav) நிறுவனம் அறிவித்தது. இன்று, பிற்பகல் நிலவரப்படி, ஆழிப் பேரலைச் சம்பவத்தில் 400-கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததோடு, 1,485 பேர் காயமடைந்தனர். 800-கும் அதிகமான வீடுகள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன.
உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள், வெப்பம் மற்றும் தடித்த சாம்பல் மேகங்களின் ஆபத்தினை தவிர்க்க, எரிமலை பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.