Home நாடு எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டால் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அபராதம்!

எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டால் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அபராதம்!

1104
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சு, நாட்டில் பெட்ரோல், டீசல் எண்ணெய் போதுமான அளவில் உள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது. 

ஆண்டு தொடக்கத்தில் எண்ணெய் விலை குறையும் என நிதியமைச்சு அறிவித்ததை ஒட்டி, அன்றைய தினம் எண்ணெய் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என மலேசியாவின் பூமிபுத்ரா பெட்ரோல் வணிகர் சங்கத் தலைவர், அபு சமா பசீக் நேற்று முன் தினம் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அமைச்சின் தலைமைச் செயலாளர், ஜமில் சாலே கூறுகையில், இந்த விவகாரத்தைக் காரணமாகக் காட்டி எண்ணெய் வினியோக நிலையங்கள் அடைக்கப்பட்டால், அந்நிலையத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்ட ரீதியாக எண்ணெய் நிலையங்களை மூடுவதற்கு, முதலாளிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு எண்ணெய் நிலையங்களை அன்றைய தினம் முடினால், 1 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அவர்களுக்கு அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என ஜமில் தெரிவித்தார்.