பெட்டாலிங் ஜெயா: நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணங்கள் உயராமல் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் வரையிலும் செலவு செய்ய உள்ளது என நிதி அமைச்சு தெரிவித்தது. மேலும், பினாங்கு மற்றும் ஜோகூரில் உள்ள பாலங்களுக்கு இலவசமாக மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு 21 நெடுஞ்சாலைகளின் கட்டண உயர்வு தடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
“மலேசியர்களின் செலவினங்கள் மற்றும் சுமைகளை அகற்றுவதற்கு பக்காத்தான் ஹாராப்பான் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சியை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல், பினாங்கு தீவில் உள்ள இரண்டு பாலங்கள் மற்றும் ஜொகூரில் இரண்டாம் இணைப்பு பாலங்களுக்கான மோட்டார் சைக்கிள்கள், கட்டணம் அகற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். இதற்கான, இழப்பிட்டுத் தொகையான 20 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக அவர் கூறினார்.