Home நாடு கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!

கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட் சாலே கூறினார். மேலும், கோயில்களின் பொறுப்பாளர்கள் குறித்த விபரங்களும் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய காலக்கட்டத்தில், கோயில்களின் நிலை என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. கோயில்கள் இருக்கும் இடத்தைப் பற்றியும் தகவல்கள் இல்லை. கோயில்கள் நிறையக் கட்டப்பட்டுள்ளன, ஆனால், அக்கோயில்களின் இருப்பு இதுவரையிலும் எங்களுக்கு தெரியாது”, என ஷாருடின் கூறினார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு பதிவுச் செய்யப்படாத கோயில்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான, பதிவுக் காலக்கெடு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.