Home Video விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி வெளியீடு!

விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி வெளியீடு!

1927
0
SHARE
Ad

சென்னை: பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படங்களில் விஸ்வாசமும் ஒன்று. இத்திரைப்படத்தை நான்காவது முறையாக அஜித்தை வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த வகையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். பாடல்களுக்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதற்கிடையே, இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே எனும் பாடலின் வரிகள் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா இணைகிறார்.

வெளியான 5 பாடல்களில் கண்ணான கண்ணே பாடல் மனதை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளதுள்ளதாக இரசிகர்கள் கூறுகிறார்கள். இந்தப் பாடலுக்கு வரிகளை இயற்றியவர் பாடலாசிரியர் தாமரை, மேலும், இந்தப் பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

கண்ணான கண்ணே பாடலை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: