Home இந்தியா சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அறிவிப்புகள்!

சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அறிவிப்புகள்!

1199
0
SHARE
Ad

சென்னை: பொது இடங்களில் நமது தாய் மொழியிலும் அறிவிப்புகள் செய்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என, பலர் நினைத்திருப்போம். அவ்வகையில், இனி, சென்னை விமான நிலையத்தில் நமது தாய் மொழி தமிழில் அறிவிப்புகள் செய்யப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டில் அனைத்து விமான நிலையங்களியிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இனி சென்னை விமான நிலையத்திலும் தமிழ் மொழியில் அறிவிப்புகளைக் கேட்கலாம்

இந்த உத்தரவு தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். உள்ளூர் மொழியில் அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.