Home உலகம் குவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு

குவாட்டமாலா: 69 பேர் மரணம் – 2 மில்லியன் பேர் பாதிப்பு

1148
0
SHARE
Ad
வெடிக்கும் பியூகோ எரிமலையின் தோற்றம்

குவாட்டமாலா – தென் அமெரிக்க நாடான குவாட்டமாலாவில் பியூகோ எரிமலை திடீரென வெடித்து, சாம்பலையும், எரி வாயு மற்றும் எரி திரவத்தையும் வெளியேற்றியதில் இதுவரையில் 2 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

69 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணலில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மரண  எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.