Home நாடு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை

1033
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்திய ஊழல் தடுப்பு ஆணையம், 8 தள்ளுவண்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

பிற்பகல் 2.00 மணியளவில் மாநகர் மன்ற அலுவலகத்தில் நுழைந்த ஊழல் தடுப்பு ஆணையத்தினர் சுமார் 2 மணிநேரம் சோதனைகள் நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.

நேற்று திங்கட்கிழமை அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர் மன்றத் தலைவர் முகமட் அமின் நோர்டின் சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்களை மாநகர் மன்றம் கைவிடவிருப்பதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாநகர் மன்றம் மேற்கொள்ளவிருந்த சர்ச்சைக்குரிய சில நில மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.