Home நாடு 28 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம்

28 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம்

1431
0
SHARE
Ad
துன் மகாதீர் அமைச்சரவையின் குழுப்படம்

புத்ரா ஜெயா – கடந்த மே 21-ஆம் தேதி பதவியேற்ற துன் மகாதீரின் 13 பேர் கொண்ட அமைச்சரவை மிக விரைவில் விரிவாக்கம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துன் மகாதீரின் அமைச்சரவையில் 28 பேர் இடம் பெற்றிருப்பர் என்றும், மேலும் 15 அமைச்சர்கள் விரைவில் துன் மகாதீரால் நியமிக்கப்பட்டு பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னரே மகாதீரின் புதிய அமைச்சரவை முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் – முழுமையான சீர்திருத்தங்கள் – செயல்படுத்தப்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.