Home நாடு சாமிவேலுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சாமிவேலுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1157
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்கு ஆசிய நாடுகளுக்கான கட்டமைப்புக்கான சிறப்புத் தூதருமான துன் சாமிவேலு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

82 வயதான சாமிவேலு, நேற்று தனது இல்லத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பிரிக்பீல்ட்ஸ் கேஎல் சென்ட்ரலில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது திடீரென அவர் வாந்தியெடுத்ததைத் தொடர்ந்து அவரை தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவரது பத்திரிக்கைச் செயலாளர் டத்தோ இ.சிவபாலன் கூறியிருக்கிறார்.

“துன் நலமுடன் உள்ளார். அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக வாந்தி எடுத்ததன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் அனைத்து பரிசோதனைகளையும் நடத்தி முடித்திருக்கின்றனர். அவர் நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு மட்டுமே தேவை” என சிவபாலன் கூறியதாக பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் சாமிவேலு மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து தனது உடல்நலம் சீராகும் வரை சிகிச்சை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாமிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்த பொதுமக்களுக்கும், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சிவபாலன் கூறியுள்ளார்.