Home நாடு ரோஸ்மாவிடம் 5 மணி நேர விசாரணை

ரோஸ்மாவிடம் 5 மணி நேர விசாரணை

925
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 1எம்டிபி தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நேற்று செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

சுமார் 5 மணி நேரம் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்ததாகவும், 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர் விசாரிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரோஸ்மா அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் எதுவும் பேசவில்லை. மாறாக அவரது சார்பாக அவரது வழக்கறிஞர் குமரேந்திரன் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வாசித்தார்.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையில் ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், ஆணைய அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொண்டதாகவும் குமரேந்திரன் அந்த அறிக்கையின் வழி தெரிவித்தார்.

மீண்டும் ரோஸ்மா எப்போது வருவார் எனக் கேட்கப்பட்டதற்கு “நான் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கப் போவதில்லை” என்றும் குமரேந்திரன் தெரிவித்தார்.