Home நாடு “பெரும் பொறுப்பு என்பதை உணர்கிறேன்” டோமி தோமஸ்

“பெரும் பொறுப்பு என்பதை உணர்கிறேன்” டோமி தோமஸ்

1385
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்ட போது, “எனக்கு அதிகாரபூர்வ கடிதம் கிடைக்கும்வரையிலும், நான் பதவிப் பிரமாணம் எடுக்கும் வரையிலும் எதையும் பேசப் போவதில்லை” என டோமி தோமஸ் கூறியிருக்கிறார்.

எனினும், தனது நியமனத்தில் அனைவரும் காட்டிய அக்கறையையும், ஆதரவையும் கண்டு தான் பணிவுடன் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டோமி தோமஸ் தெரிவித்தார்.

“இது மிகப் பெரிய சவால் நிறைந்த பொறுப்பு என்பதை உணர்கிறேன்” என்றும் டோமி தோமஸ் கூறியிருக்கிறார்.

அபாண்டி அலி வாழ்த்து

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தனக்குப் பதிலாகப் பதவியேற்கப் போகும் டோமி தோமசுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி, “இது மிகவும் அனலாகக் கொதிக்கும் நாற்காலி என்பதை மட்டும் அவருக்குக் கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.