Home நாடு “அபாண்டி அலியை நீக்குங்கள்” – ராம் கர்ப்பால்

“அபாண்டி அலியை நீக்குங்கள்” – ராம் கர்ப்பால்

1122
0
SHARE
Ad
ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர் -கட்டாய விடுமுறையில் இருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்னும் பதவி விலகாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் துன் மகாதீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சிறந்த சட்ட அறிவாற்றல் கொண்டவருமான டோமி தோமஸ் அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டு, அந்தப் பரிந்துரை சுல்தான்கள் மாநாட்டின் பார்வைக்காகவும் அங்கீகரிப்புக்காகவும் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அபாண்டி அலி

நடப்பு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலிக்குப் பதிலாக புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் முயற்சியில் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.