Home Photo News சிங்கை மாரியம்மன் ஆலயத்தில் மோடி வழிபாடு (படக் காட்சிகள்)

சிங்கை மாரியம்மன் ஆலயத்தில் மோடி வழிபாடு (படக் காட்சிகள்)

1361
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இந்தோனிசியா, மலேசியா வருகைகளை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த மோடி அங்கு வழிபாட்டில் கலந்து கொண்டார்:சிங்கையில் உள்ள சுலியா பள்ளிவாசலுக்கும் வருகை தந்த மோடி, அதன் பின்னர் மற்ற சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் வருகை தந்தார்.

சிங்கையில் உள்ள புத்தர் ஆலயத்திற்கும் வருகை தந்து வழிபாடு நடத்திய மோடி, அந்த ஆலயத்தையும் சுற்றிப் பார்த்தார்:

சிங்கப்பூரில் மோடியை வரவேற்கத் திரண்ட கூட்டத்தினர்…
#TamilSchoolmychoice

தனது சிங்கப்பூர் வருகையின் ஒரு பகுதியாக அங்குள்ள கடற்படைத் தளத்திற்கும் வருகை தந்து இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நிலவி வரும் கடற்படைத் துறையிலான ஒத்துழைப்புகளையும் பார்வையிட்டார்.

படங்கள்: நன்றி – நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்