Home நாடு அம்னோ தலைவருக்கு துங்கு ரசாலி போட்டியா?

அம்னோ தலைவருக்கு துங்கு ரசாலி போட்டியா?

1144
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ தேசியத் தலைவருக்குப் போட்டியிடப் போவதாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ள நிலையில், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா அந்தப் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்ற நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் 81 வயதான துங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.

“அம்னோ தோல்வியுற்ற காரணத்தால் பலவீனமான கட்சி என பொருள் கொள்ள முடியாது. அம்னோ இன்னும் மக்களின் ஆதரவைப் பெற்று வலுவுடன் திகழ்கிறது” என்றும் துங்கு ரசாலி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை குவா மூசாங் அம்னோவின் மாதாந்திரக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது துங்கு ரசாலி இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் சாசனத்தின் கீழ் மலாய்க்காரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் அம்னோவின் முக்கியக் கடமையாக இனி இருக்கும் என்றும் துங்கு ரசாலி குறிப்பிட்டார்.