Home நாடு அம்னோ தலைவர் பதவிக்கு சாஹிட் போட்டி

அம்னோ தலைவர் பதவிக்கு சாஹிட் போட்டி

1111
0
SHARE
Ad
அகமட் சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர் – நடைபெறவிருக்கும் அம்னோவுக்கான தேசியத் தலைவர் தேர்தலில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நஜிப் தலைவர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து தற்போது தலைவருக்கான பொறுப்புகளை துணைத் தலைவரான சாஹிட் ஹாமிடி வகித்து வருகிறார்.

சாஹிட் போட்டியிடுவதை அவரது பத்திரிக்கைச் செயலாளர் மேஜர் ஜெனரல் டத்தோ பட்ஸ்லெட் ஒத்மான் மெரிக்கன் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வேட்புமனுப் பாரங்களில் சாஹிட் கையெழுத்திட்டுள்ளதை ஒத்மான் மெரிக்கன் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் துணைத் தலைவருக்கான பணிகளை மேற்கொண்டு வரும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவது என்ற முடிவை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த மே 22-ஆம் தேதி நடந்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோவின் எல்லாப் பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் தாராளமாகப் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் துணைத் தலைவருக்குப் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளார்.

அம்னோ உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக நடப்பு இளைஞர்
பகுதித் தலைவர் டத்தோஸ்ரீ கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார்.