Home நாடு “டோமி தோமஸ் பெயரை மட்டுமே சமர்ப்பித்தோம்” – மகாதீர்

“டோமி தோமஸ் பெயரை மட்டுமே சமர்ப்பித்தோம்” – மகாதீர்

1294
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கும் புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் குறித்து கருத்துரைத்த பிரதமர் துன் மகாதீர், வழக்கறிஞர் டோமி தோமஸ் பெயரை மட்டுமே அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு சுல்தான்கள் மாநாட்டுக்கு சமர்ப்பித்திருப்பதாகவும், வேறு பெயர்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) உறுதிப் படுத்தினார்.

டோமி தோமஸ் பெயர் ஒரு வாரத்திற்கு முன்பே மாமன்னரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

டோமி தோமஸ்

சட்டப்படித்தான் அந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்றும் மகாதீர் விளக்கினார். “அரசியல் சாசனத்தின்படி மாமன்னர் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். அந்த நடைமுறைக் கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என்று இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டோமி தோமசின் நியமனம் பக்காத்தான் தலைவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. எனினும் முஸ்லீம் அல்லாத ஒருவரை அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிப்பதற்கு சுல்தான்கள் மாநாடு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவியுள்ளன.

மேலும் டோமி தோமஸ் லிம் குவான் எங்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் சில தரப்புகள் கூறியிருக்கின்றன. அதற்குப் பதிலளித்த மகாதீர் “டோமி தோமஸ் பலருக்கு வழக்கறிஞராக செயல்பட்டிருக்கிறார். தங்களுக்கு வருமானம் தரக் கூடிய வழக்குகளை வழக்கறிஞர்கள் எடுப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.