Home நாடு சுல்தான்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை கூடுகிறது

சுல்தான்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை கூடுகிறது

1081
0
SHARE
Ad
டோமி தோமஸ்

கோலாலம்பூர் – புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் பிரதமர் துன் மகாதீருக்கும், மலாய் சுல்தான்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) மலாய் சுல்தான்களின் மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் மீதான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுல்தான்கள் மாநாடு டோமி தோமஸ் நியமனத்திற்கு ஒப்புதல் தரலாம் அல்லது அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேறு பெயரை சமர்ப்பிக்கும்படி பிரதமரை சுல்தான்கள் சார்பாக மாமன்னர் கேட்டுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் குறித்து கருத்துரைத்த பிரதமர் துன் மகாதீர், வழக்கறிஞர் டோமி தோமஸ் பெயரை மட்டுமே அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு சுல்தான்கள் மாநாட்டுக்கு சமர்ப்பித்திருப்பதாகவும், வேறு பெயர்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் உறுதிப் படுத்தினார்.