Home இந்தியா கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

2078
0
SHARE
Ad
கலைஞரிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்

சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று சனிக்கிழமை (ஜூன் 2) கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நேற்றிரவு நள்ளிரவு 12.00 மணிக்கு கலைஞரின் இல்லத்தின் முன் கூடிய அவரது ஆதரவாளர்கள் ‘கேக்’ வெட்டி அவரது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

#TamilSchoolmychoice

இன்று திமுகவின் செயல் தலைவரும், கலைஞரின் மகனுமான ஸ்டாலின் அவரிடம் வாழ்த்து பெற்றார் (மேலே படம்)

இதற்கிடையில் மற்ற கட்சித் தலைவர்களும் கலைஞருக்கு வாழ்த்து மாலைகள் சூடியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

முன்பு கலைஞரை அவரது வீட்டில் சென்று சந்தித்த படத்தைப் பதிவிட்டு “இந்தியாவின் பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர் கலைஞர் கருணாநிதி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என மோடி தெரிவித்துள்ளார்.