Home நாடு கைரிக்கு ஆதரவு தரும் மகாதீர்

கைரிக்கு ஆதரவு தரும் மகாதீர்

1173
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டத்தோஸ்ரீ கைரி ஜமாலுடினுக்கு (படம்) எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலை முன்னிட்டு அவரே எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது.

பிரதமர் துன் மகாதீரின் ஆதரவுதான் அது!

அம்னோவின் அடுத்த தேசியத் தலைவராக வருவதற்கு கைரிதான் பொருத்தமானவர் என மகாதீர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நேற்று அலோர்ஸ்டாரில் கெடா மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது மகாதீர் இவ்வாறு கூறினார்.

“தற்போது அம்னோ சிதறி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. தனது போராட்டத்தில் எந்த இலக்கை நோக்கிச் செல்வது என்ற நோக்கமின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் அம்னோவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதற்கு கைரி ஜமாலுடினே பொருத்தமானவர்” என மகாதீர் தெரிவித்துள்ளார்.