Home நாடு “தொழில்நுட்ப திறனறிவு மாணவர்களை மேம்படுத்தும்”

“தொழில்நுட்ப திறனறிவு மாணவர்களை மேம்படுத்தும்”

2340
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி தேசிய வகை ரீனீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் குருசாமி அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவர் தம் உரையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனறிவும், புத்தாக்க சிந்தனையும் மாணவர்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் என்றும், ஒர் இடத்தில் இருந்துக் கொண்டே உலகில் எங்கும் பணியாற்றலாம், எவ்வகையான சேவைகளையும் இயக்க முடியும் என்றும், ஆகவே மாணவர்கள் அகன்ற விழிகளுடன் தொழில்நுட்பத்தைத் தெரிந்துக் கொண்டு தன் வாழ்க்கையின் உயர்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இவ்வாண்டு ஜோகூர் மாநிலத்திருந்து இருந்து சுமார் 69 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன, அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, ஸ்கேட்ஸ் போட்டிகள் நடைபெற்று மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, பின்னர் தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

மாநில நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து தேசிய நிலையில் நடைபெறும் போட்டியில் பங்குபெறுவர்.

ஜோகூர் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள்:

எண் மாணவர் பெயர் பள்ளியின் பெயர்
1 R. Vijaybaskar (SJKT Kangkar Pulai)
2 Yogaawaanan Vellan (SJKT Tun Aminah)
3 Niveetha Kumaran (SJKT Haji Manan)
4 Vuggashini Mageswaran (SJKT Tun Aminah)
5 Tanush kumaar Arumugam (SJKT Kulai besar)
6 Krishendran Sukumar (SJKT Tun Aminah)
7 Bhavanasri Suppiah (SJKT Rini)
8 Darshini Sasikumar (SJKT Rini)
9 Neyhan Raguraraman (SJKT Tun Aminah)
10 Abinaya Magandran (SJKT Tun Aminah)
11 Nilavarasan Subramaniam (SJKT Jln Yahya awal)
12 Hemaprasad Jeyabalu (SJKT Tun Aminah)
13 Vasanda Sena Maniam (SJKT Nagappa)
14 Chris Irene Rao Krishna Rao (SJKT Kulai Besar)
15 Hervin Rao Jegadheesh Rao (SJKT Tun Aminah)

மேற்காணும் பட்டியல் மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்களைக் கொண்டதாகும். இம்மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.