Home இந்தியா சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் மாயம்: பதற்றமடைந்த அதிகாரிகள்!

சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் மாயம்: பதற்றமடைந்த அதிகாரிகள்!

1578
0
SHARE
Ad

புதுடெல்லி – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை தனி விமானத்தில் தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்.

டில்லியில் இருந்து புறப்பட்ட அவ்விமானம் திருவனந்தபுரத்திலும், மொரீஷியஸ் தீவிலும் எரிபொருள் நிரப்பத் திட்டமிட்டிருந்தது.

அதன் படி, டில்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய விமானம், எரிபொருள் நிரப்பிவிட்டு, அங்கிருந்து மொரீஷியஸ் புறப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டது. சுமார் 15 நிமிடங்கள் மொரீஷியஸ் அதிகாரிகள் சுஷ்மா சென்ற விமானத்தைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால், சென்னை வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் சில மணித்துளிகள் எங்கும் பரபரப்புத் தொற்றிக் கொள்ள, 14 நிமிடங்களுக்குப் பிறகு சுஷ்மா சுவராஜ் சென்ற விமானத்தின் விமானி மொரீஷியஸ் வான் போக்குவரத்து அறையுடன் மீண்டும் தொடர்பிற்கு வந்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்வாறு ஏற்பட்டதாகக் கருதப்பட்டு அது குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.