Home தேர்தல்-14 தாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு

தாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு

1874
0
SHARE
Ad
மர்சுகி யாஹ்யா – பினாங்கு மாநில பெர்சாத்து கட்சித் தலைவர்

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியான தாசேக் குளுகோர் தொகுதியின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்படவுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றது. தாசேக் குளுகோர் மற்றும் கப்பளா பத்தாஸ் ஆகியவையே அந்த இரண்டு தொகுதிகளாகும்.

தாசேக் குளுகோர் தொகுதியில் 81 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஷாபுடின் யாஹாயா 18,547 வாக்குகள் பெற, பிகேஆர் சார்பில் போட்டியிட்ட பிரிபூமி பெர்சாத்து கட்சியின் ஹாஜி மர்சுகி பின் யாஹ்யா 18,466 வாக்குகள் பெற்றார்.

NEGERI PULAU PINANG
Parlimen P.042 – TASEK GELUGOR
PARTI MENANG BN
MAJORITI UNDI 81
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
DATUK SHABUDIN YAHAYA (BN) 18547
HJ. MARZUKI BIN YAHYA (PKR) 18466
RIZAL HAFIZ BIN RUSLAN (PAS) 14891
#TamilSchoolmychoice

 

பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிசால் ஹபிஸ் பின் ருஸ்லான் 14,891 வாக்குகள் பெற்றார்.

இந்த முடிவுகளைத் தொடர்ந்து மர்சுகி பின் யாஹ்யா தேர்தல் நடந்த அன்று மறு வாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் அதிகாரி அதற்கு இணங்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் செல்லாத வாக்குகள் 689 என வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

திரும்பி வராத வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை 297 ஆக இருந்தது.

இந்த காரணங்களின் அடிப்படையில் இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக மர்சுகி கூறியிருக்கிறார்.

மர்சுகி பினாங்கு மாநில பெர்சாத்து கட்சியின் தலைவருமாவார்.