Home நாடு தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்!

தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்!

712
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தேர்தல் நீதிமன்றம் தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி இரண்டாம் தேதி, மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மார்சுக்கி யஹ்யாவின் மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்பட்டது.

தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் 81 வாக்குகள் வித்தியாசத்தில் மார்சுக்கி தேசிய முன்னணி வேட்பாளர், டத்தோ ஷாபுடின் யஹ்யாவிடம் தோற்றார்.

#TamilSchoolmychoice

வாக்குகளை மறுக் கணக்கெடுப்பு செய்யக் கோரியதால், தேர்தல் நீதிமன்ற நீதிபதி ஹசிம் ஹம்சா, மார்சுக்கியின் மனுவை ஏற்றுக் கொண்டு அத்தொகுதியில் வாக்குகளை மீண்டும் கணக்கிட உத்தரவிட்டார்.

பெர்சாத்து கட்சியின் செனட்டரான, மார்சுக்கி, கடந்த மே 9-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஷாபுடின்  யஹ்யாவிடம் தோல்வியுற்றார். டத்தோ ஷாபுடின் யஹ்யாவுக்கு 18,466 வாக்குகள் கிடைத்த வேளையில், மார்சுக்கிக்கு 18, 547 வாக்குகள் கிடைத்தன.