Home நாடு சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்

சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்

937
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதிலிருந்து காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டனர் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான் தெரிவித்தார்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் தாமதமாக செயல் படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சூழலில் சம்பந்தப்பட்டோரை அடையாளம் காண்பது கடினம் எனவும் அவர் கூறினார்.  

#TamilSchoolmychoice

கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் காவல் துறையினர் ஆராய்ந்து, விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், முகமட் அடிப்பின் இறப்பிற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, முழுமையான விசாரணைக்குப் பின்பு, அவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.