Home Video விஸ்வாசம்: “தல்லே… தில்லாலே!” பாடல் அசத்தி வருகிறது!

விஸ்வாசம்: “தல்லே… தில்லாலே!” பாடல் அசத்தி வருகிறது!

1694
0
SHARE
Ad

சென்னை: விஸ்வாசம் திரைப்படப் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் இவ்வேளையில், அந்தோனி தாசன் குரலில் வெளியான “தல்லே..தில்லாலெ!” எனும் தனிப்பாடல் சமூக ஊடகங்களில் அசத்தி வருகிறது.

நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கைக்கோர்க்கும் நடிகர் அஜித், இதற்கு முன்னர், சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் எனும் மூன்று படங்களில் நடித்துள்ளார். கடந்த படங்களில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதும், அத்திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தன. இத்திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக அஜித்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இரண்டு தினங்களுக்கு முன்னதாக விஸ்வாசம் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாயின. இப்பாடல்கள் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது, அருண் பாரதியின் வரிகளுக்கு, அந்தோனி தாசன் பாடிய தல்லே தில்லாலே பாடல் வெளியாகியுள்ளது. கிராமிய மணத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது என்பது இரசிகர்களின் கருத்து.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி அப்பாடலை கேட்கலாம்: