Home நாடு வான் சைபுல் துணைவியார் காலமானார்!

வான் சைபுல் துணைவியார் காலமானார்!

297
0
SHARE
Ad
வான் சைபுல் – துணைவியார் எலினா ஓமாருடன்…(படம்: நன்றி ஸ்டார் பத்திரிகை)

கோலாலம்பூர் : பினாங்கு தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான்னின் துணைவியார் டத்தின் எலினா ஓமார் இன்று திங்கட்கிழமை (ஜூலை 22) பிற்பகல் 3.07 மணியளவில் காலமானார்.

வான் சைபுல் பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். கடந்த ஜூன் 4-ஆம் தேதி தனது மனைவி குடல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் போராடிக் கொண்டிருக்கிறார் என தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். மரணம் எய்தும் தறுவாயில் எலினா தேசிய புத்ரா ஜெயா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.